தமிழக அரசு அறிவித்துள்ள புதிய திட்டத்தின் மூலம், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த பெண்களுக்கு நிலம் வாங்க ரூ.5 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான முக்கிய தகுதிகள்: ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும், விவசாயத் தொழில் செய்பவராக இருக்க வேண்டும், தாட்கோ (TAHDCO) திட்டத்தின் கீழ் முந்தைய மானியம் பெறாதவராக இருக்க வேண்டும், மற்றும் விண்ணப்பதாரர் நிலமற்றவராக இருக்க வேண்டும் என்பவை. திட்டத்திற்குத் தகுதியான பெண்கள் www.tahdco.com இணையதளத்தில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இந்த மானிய உதவி, நிலம் இல்லாத பெண்களுக்கு நிலம் வாங்கும் வாய்ப்பை உருவாக்கும் வகையில் தமிழக அரசு எடுத்துள்ள முக்கிய நடவடிக்கையாகும்.