சீனாவின் குவாங்சி ஜுவாங் தன்னாட்சி பிராந்தியத்தில் உள்ள பிங்னான் கவுண்டியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் தற்போது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 66 வயதான சோவ் என்பவர் தனது காதலியுடன் ஹோட்டல் அறையில் உடலுறவுக்குள் ஈடுபட்டபோது திடீரென உயிரிழந்தார்.

நீண்டகாலமாக உயர் இரத்த அழுத்தம் மற்றும் பக்கவாதம் போன்ற உடல்நலக் குறைபாடுகளில் இருந்து அவதிப்பட்டு வந்த அவர், உடலுறவுக்குப் பிறகு தூங்கச் சென்று விழித்தபோது சுவாசிக்க முடியாத நிலையில் உயிரிழந்தார்.

இதையடுத்து அவருடன் இருந்த காதலி ஜுவாங் உடனடியாக ஹோட்டல் ஊழியர்களிடம் சொல்லாமல் வீட்டிற்கு சென்று விட்டார். காரணமாக, அவரும் இரத்த அழுத்தம் காரணமாக மருந்து எடுத்துக்கொள்ள வேண்டிய நிலை இருந்ததாக கூறுகிறார்.

ஒரு மணி நேரம் கழித்து திரும்பி ஹோட்டல் ஊழியர்களிடம் கதவை திறக்கச் சொல்லியபோது தான் சோவ் இறந்தது தெரியவந்தது. பின்னர் மருத்துவ பரிசோதனையில் அவர் மரணம் உறுதி செய்யப்பட்டார். இந்த விவகாரம் சோவின் மனைவி மற்றும் மகனை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

வழக்கில், சோவின் குடும்பத்தினர் ஜுவாங் மற்றும் ஹோட்டல் நிர்வாகத்திடம் மொத்தம் 5.5 லட்சம் யுவான் (சுமார் ₹66 லட்சம்) இழப்பீடு கோரி வழக்குத் தொடர்ந்தனர். நீதிமன்ற விசாரணையில் சோவின் மரணத்திற்கு முதன்மையான காரணம் அவரது உடல்நலக் குறைபாடுகளே என கூறப்பட்டது.

இருப்பினும், நெருக்கடியான நேரத்தில் உதவிக்கு அழைக்காமல் வீட்டுக்குச் சென்ற ஜுவாங் மீது 10% பொறுப்பு உள்ளது அவர் சரியான நேரத்தில் மருத்துவரிடம் அல்லது ஹோட்டல் ஊழியர்களிடம் தெரிவித்திருந்தால், சோவை காப்பாற்றியிருக்க முடியும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது . அதன் அடிப்படையில், 62,000 யுவான் (சுமார் ₹8.6 லட்சம்) அபராதம் செலுத்த ஜுவாங் மீது உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த வழக்கில் ஹோட்டல் நிர்வாகத்திற்கு எந்தவிதமான குற்றச்சாட்டும் இல்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சம்பவம் ஒரு தனிப்பட்ட ஹோட்டல் அறையில் நடந்ததாலும், ஹோட்டல் ஊழியர்கள் தலையிட முடியாத சூழ்நிலை எனவே, ஹோட்டலை பொறுப்பேற்க முடியாது.

 இது தவிர, இந்த உறவு திருமணமான ஒரு ஆணுடனான சட்டவிரோத உறவாகும்,  இந்த தீர்ப்பு சீனாவில் பரபரப்பாக பரவி வரும் நிலையில், சமூக ஊடகங்களில் இது குறித்து பலவிதமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.