இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பயன்படுத்துவோருக்கு மெட்டா புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இனிமேல் ரீல்களைப் போஸ்ட் செய்யும்போது, ‘**Link a reel**’ என்ற புதிய ஆப்ஷனை பயன்படுத்த முடியும். இதன்மூலம், நாம் முன்பு பகிர்ந்த ரீல்களை இணைத்து, புதிய ரீலுடன் இணைத்துப் பகிரும் வசதி கிடைக்கிறது. இது, ஒரே தொடரில் பல ரீல்களை viewers-க்கு தெளிவாகக் காண்பிக்க உதவுகிறது.
இந்த புதிய அம்சத்தின் உதவியுடன், பழைய ரீல்களை மீண்டும் ஹைலைட் செய்ய முடியும். குறிப்பாக, சில முக்கியமான தொடர்சியான பதிவுகள், இப்போது ஒரே கட்டமாக பார்த்து ரசிக்க முடியும். மேலும், இந்த வசதி, **பழைய மற்றும் புதிய ரீல்களுக்கு இடையிலான தொடர்பை உருவாக்கி**, பயனர்களுக்கு நல்ல அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
