உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில், கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி 35 வயது பெண் ஒருவர், குழந்தை வேண்டி தந்திரிகர் முஸ்தாக் அலி (வயது 45) என்ற நபரிடம் சென்றுள்ளார் .

திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத நிலையில், சடங்கு செய்வதன் மூலம் பிரசவம் நடக்கும் என கூறிய அவர், தனிமையில் அழைத்து சென்று பெண்ணை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. துயரத்தில் இருந்த பெண்ணின் நம்பிக்கையை தவறாக பயன்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் நேரடியாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றவாளியான முஸ்தாக் அலியை பிடிக்க சிறப்பு படை அமைத்து தேடிவருகின்றனர்.  தப்பிச் சென்றுள்ள முஸ்தாக் அலியை விரைவில் கைது செய்வோம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.