ராஜஸ்தான் மாநிலம் செவ்வாய் மாதப்பூர் பகுதியில் சுர்வால் அணை அமைந்துள்ளது. அங்கு பெய்த கனமழை காரணமாக அணையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அந்த சமயம் 10 பேர் நாட்டு படகு ஒன்றில் பயணம் செய்தனர். திடீரென அந்த படகு வெள்ளை நீரில் கவிழ்ந்ததால் 10 பேரும் தண்ணீரில் தத்தளித்தனர்.
இதுகுறித்து அறிந்த பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஒருவரை மீட்டனர். மீதமுள்ள 9 பேரும் பாதுகாப்பாக நீந்தி கரைக்கு வந்தனர். படகு கவிழ்ந்து 10 பேரும் தத்தளித்த வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. அந்த பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
आज #सवाईमाधोपुर में तेज बारिश के चलते नदी-नालें उफान पर है।
इस विडियो में नाव में लगभग 10 लोगों के बहने की सूचना आ रही है।। pic.twitter.com/GSoH1rr2AV— ajju_रायसना(नरेश मीना का परिवार) (@IamAjju9984) August 22, 2025
