சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள ஒரு வீடியோ நெட்டிசன்களை ஆச்சரியத்திலும் விமர்சனத்திலும் ஆழ்த்தியுள்ளது. ரயில்வே கிராசிங்கில் கேட் மூடப்பட்டிருந்தபோதும், காத்திருக்காமல் ஒருவர் தனது பைக்கை தோளில் தூக்கிக்கொண்டு தண்டவாளம் கடந்த சம்பவம் காட்சியாகியுள்ளது.
சுமார் 100 கிலோ எடையுள்ள பைக்கை மிக எளிதாக தூக்கிச் சென்ற அந்த மனிதரை பார்த்த சிலர் அவரை “பாகுபலி” என்று அழைக்க, பலர் அவரது செயலை கடுமையாக விமர்சித்துள்ளனர். ரயில்வே கேட்கள் மூடப்படுவதன் நோக்கம் பாதுகாப்பு என்பதையும், இப்படிப்பட்ட அசட்டுத்தனமான செயல்கள் விபத்துக்கே வழிவகுக்கும் என்றும் நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
रेलवे क्रॉसिंग की ऐसी की तैसी…..!!!
हम जहाँ खड़े होते है….. लाइन वहीं से शुरू होती है…!! pic.twitter.com/ZoibSNgyqW
— kapil bishnoi (@Kapil_Jyani_) August 17, 2025
“>
முன்னர் ட்விட்டர் என அறியப்பட்ட X தளத்தில் @Kapil_Jyani_ என்ற பயனர் பகிர்ந்த இந்த வீடியோ, இதுவரை 1 லட்சத்து 67 ஆயிரம் முறை பார்க்கப்பட்டு வைரலாகி வருகிறது. வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்து தெளிவான தகவல் ஏதும் கிடைக்கவில்லை. சிலர் இது பஞ்சாபிலிருந்து வந்ததாகவும், சிலர் ராஜஸ்தானில் நடந்ததாகவும் கூறுகின்றனர்.
“பாகுபலி மாதிரி வந்துட்டாரு”, “5 நிமிடம் காத்திருக்க முடியலையா?”, “திறமையை காட்டும் இடம் இது அல்ல” என்று பல்வேறு கமெண்டுகள் குவிந்துள்ளன. பாதுகாப்பை புறக்கணித்த இந்த செயலால் பெரும் விவாதம் எழுந்துள்ளது.
