சென்னையைச் சேர்ந்த புகழ்பெற்ற மகப்பேறு மருத்துவரும், மறைந்த ‘ஐந்து ரூபாய் மருத்துவர்’ ஜெயச்சந்திரனின் மனைவியுமான டாக்டர் வேணி (71) மாரடைப்பால் உயிரிழந்தார்.

ஒரு லட்சத்திற்கும் அதிகமான பிரசவங்களை பார்த்து ஆயிரக்கணக்கான தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் வாழ்நாள் பரிசாக தந்தவர் எனவே இவர் மருத்துவத் துறையில் பெரும் பெயரைப் பெற்றிருந்தார். தனது கணவரின் மக்கள் சேவையை தொடர்ந்து, பொதுமக்களுக்கு எளிய செலவில் சிகிச்சை வழங்கியதும் இவரது சிறப்பு ஆகும்.

வேணியின் திடீர் மரணம் மருத்துவ வட்டாரத்தையும் பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமூகத்தில் பலருக்கு நம்பிக்கையான மருத்துவராக விளங்கிய இவர், கணவர் பாணியைப் பின்பற்றி மனிதநேய சிகிச்சையை வழங்கியவர் என்று மக்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். இவரது மறைவுக்கு அரசியல் மற்றும் மருத்துவ வட்டாரங்களிலிருந்து இரங்கல் தொடர்ந்து வெளியாகி வருகிறது.