கேரளாவில் நடந்த ஒரு இதயத்தை உருக்கும் சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமூக ஊடகங்களில் பரவி வரும் அந்த வீடியோவில், லிஜோ என்ற இளைஞர் தனது உயிரையே பணயம் வைத்து ஒரு குட்டி மானின் உயிரைக் காப்பாற்றியிருப்பது தெரிகிறது. ஆழமான நீர்குழியில் விழுந்த அந்த மான்குட்டி மயக்கமடைந்து தண்ணீரில் மிதந்துகொண்டிருந்தது. அதை காப்பாற்ற கயிறு கட்டிக்கொண்டு உள்ளே இறங்கிய லிஜோ, தனது முழு ஆற்றலையும் பயன்படுத்தி குட்டியை மீட்டார்.
மானை மட்டும் வெளியே எடுக்காமல், அதற்கு வாய்க்கு வாய் மூச்சளித்து புத்துயிர் அளித்தார். ஆரம்பத்தில் சுவாசமின்றி கிடந்த குட்டி மான், லிஜோவின் முயற்சியால் மீண்டும் உயிர்பெற்றது. இந்த சம்பவத்தை பார்த்தவர்கள், “மனிதன் எவ்வளவு பேரன்பு கொண்டவனாக மாற முடியும்” என்பதற்கான சான்று இதுதான் என்று புகழ்ந்து வருகின்றனர். லிஜோ ஒரு தொழில்முறை விலங்கு மீட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
अद्भुत….
ये केरल के लीजो हैं, जो एक प्रोफेशनल एनिमल रेक्यूअर हैं।
इन्होंने स्वयं का जीवन खतरे में डालकर एक हिरण के बच्चे को न सिर्फ पानी के गहरे गड्ढे से बाहर निकाला बल्कि उसे मुह से सांस देकर नया जीवन दिया है।
क्या कमाल किया है लीजो भाई आपने…👏👏 सल्यूट❣️#EveryLifeMatters… pic.twitter.com/Rfm31GYolo— SACHIN KAUSHIK (@upcopsachin) August 14, 2025
“>
இந்த வீடியோவை @upcopsachin என்ற அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் பகிர்ந்துள்ளது. “அற்புதம்… கேரளாவைச் சேர்ந்த லிஜோ, தனது உயிரை ஆபத்தில் இட்டு, மானை காப்பாற்றியதோடு, அதற்கு புதிய உயிரையும் அளித்தார். சல்யூட் லிஜோ பாய்!” என பதிவிட்டுள்ளனர். சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கான பார்வைகளையும், நூற்றுக்கணக்கான லைக்குகளையும் பெற்றுள்ள இந்த வீடியோ, இணையவாசிகளின் மனதையும் கவர்ந்துள்ளது. “இது தான் உண்மையான மனிதநேயம்” என்று அனைவரும் ஒருமித்த பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.
