சென்னை: நடிகர் ரஜினிகாந்த் – இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான ‘கூலி’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் அமீர்கான், சத்யராஜ், நாகார்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இன்று காலை 6 மணிக்கே சிறப்பு காட்சிகள் தொடங்கிய நிலையில், திரையரங்குகள் ரசிகர்களின் ஆரவாரத்தால் அதிர்ந்தன. இதன் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. தமிழகத்தில் காலை 9 மணிக்கே சிறப்பு காட்சிகள் தொடங்க, பல்வேறு திரைப் பிரபலங்களும் ரசிகர்களோடு சேர்ந்து படத்தை கண்டு வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

“>

இந்நிலையில் சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ரஜினிகாந்திற்கு இயக்குநர் விக்னேஷ் சிவன் வாழ்த்து தெரிவித்துள்ளார். ரஜினிகாந்துடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அவர், “முதன்முறையாக உங்களை சந்தித்தபோது என் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை தலைவா… உங்களை தெரிந்தவர்கள், திரைத்துறையினர் அனைவரும் உங்களை நேசிப்பதற்கான காரணம் உங்கள் நல்ல மனிதத்துவம் தான். உங்கள் மீது இருக்கும் ரசிகர்களின் அன்பு என்றென்றும் தொடரும். ‘கூலி’ படம் வெற்றி பெற வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.