உத்தரப்பிரதேச மாநிலத்தில் ரக்ஷா பந்தன் அன்று ராக்கி கட்டிய தங்கை உறவுமுறை கொண்ட 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 33 வயதுடைய சுர்ஜித் என்பவர் தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது உறவினரின் மகள் சுர்ஜித்துக்கு ராக்கி கட்டி விட்டார்.
பின்னர் இரவு நேரம் மது குடித்துவிட்டு போதையில் வீட்டிற்கு வந்த சுர்ஜித் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்று அவரது உடலை அறையில் தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை செய்து கொண்டது போல நாடகமாடியுள்ளார்.
இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது.
சுர்ஜித்தை பிடித்து போலீசார் விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார் பின்னர் சிறுமையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
