புதிய வங்கி கணக்கு தொடங்குபவர்களுக்கு ஐசிஐசிஐ வங்கி அதிர்ச்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிப்படி, நகர்ப்புற மற்றும் மெட்ரோ பகுதிகளில் புதிய சேமிப்புக் கணக்குகளுக்கு மாதாந்திர சராசரி குறைந்தபட்ச இருப்புத் தொகை (AMB) ரூ.50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், சிறு நகரங்களில் ரூ.25,000, கிராமப்புறங்களில் ரூ.10,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் புதிய கணக்குதாரர்களுக்கு மட்டும் பொருந்தும் எனவும், ஏற்கெனவே கணக்கு வைத்திருப்பவர்கள் பழைய குறைந்தபட்ச இருப்புத் தொகை விதிப்படி தொடர்வார்கள் எனவும் வங்கி தெரிவித்துள்ளது.