லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படம், வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. அமீர்கான், நாகார்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், சவுபின் ஷாயிர், உபேந்திரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைப்பில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

படத்தின் தணிக்கை பணிகள் முடிவடைந்து, அதிக சண்டைக் காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், மத்திய திரைப்படத் தணிக்கை குழுவினால் ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, ரஜினி-லோகேஷ் கூட்டணியில் வரும் இந்த படம், ரஜினியின் கேரியரில் வித்தியாசமான திருப்பமாக இருக்கும் என ரசிகர்கள் நம்பிக்கை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ‘கூலி’ படத்திற்கான டிக்கெட் முன்பதிவு இன்று இரவு 8 மணியளவில் தமிழகத்தில் துவங்கியது. புக்கிங் துவங்கிய சில நிமிடங்களிலேயே ரசிகர்கள் போட்டி போட்டு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். முன்னதாகவே படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வைரலாகி இருந்ததால், முன்பதிவு வசூலில் பல கோடிகளை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.