சீனாவின் வடக்கு பகுதியில் பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒரு தம்பதியினர் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டார்கள்.
அவர்களை மீட்க வந்த மீட்பு குழுவினரிடம் அந்த கணவர் கூறிய வார்த்தைகள் இணையத்தில் உள்ளோரது கண்களில் கண்ணீர் வர வைக்கக்கூடியதாக மாறியுள்ளது. “முதலில் என் மனைவியைக் காப்பாற்றுங்கள்… அவளுக்கு நீச்சல் தெரியாது”என கணவர் கூறியுள்ளார்.
இது தொடர்பான 27 வினாடிகளைக் கொண்ட வீடியோ சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது. அந்த காணொளியில், வெள்ள நீரில் மூழ்கிக்கொண்டிருந்த அந்த தம்பதியினரை தீயணைப்பு வீரர்கள் காப்பாற்ற வந்தபோது, தனது மனைவியின் பாதுகாப்பையே முதன்மையாகக் கருதி தனது உயிரைப் பற்றிய பயத்தை புறக்கணித்த கணவனின் செயல்பாடு அனைவரையும் கண்கலங்க வைக்கிறது.
இந்த வீடியோவுக்குப் பின்னர் பலர் சமூக ஊடகங்களில் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர். “இப்படி ஒரு கணவர் இருக்கறது ஒரு பாக்கியம்”, “இது காதலின் உண்மையான வடிவம்”, “அந்த கணவனின் எண்ணம் என் இதயத்தை தொட்டது” எனப் பலர் உருக்கமாகப் பதிவிட்டுள்ளனர்.
