இசையமைப்பாளர் இளையராஜா, இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர் ஆவார். இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976-இல் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இளையராஜாவுக்கு, இந்திய நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது, 2018 சனவரி 25 அன்று, இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது.
View this post on Instagram
இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜாவின் பிறந்தநாளின் போது ஆங்கர் ஒருவர், ஒரு நபரிடம் இளையராஜா குறித்து கேள்வி கேட்டார். ஆங்கர் கேட்ட எல்லா கேள்விகளுக்கு எல்லாம் அந்த நபர் சரியாக பதிலளித்தார். இதனால் ஆங்கர் மிரண்டு போனார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
