உத்திரபிரதேசம் மாநிலம் ஜான்சி பகுதியில் கடந்த 1976-ஆம் ஆண்டு கூட்டுறவு சங்கத்தில் 14 ஆயிரம் ரூபாய் முறைகேடு செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில் சுமார் 49 ஆண்டுகளுக்கு பிறகு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
வழக்கில் கைதான மூன்று பேரில் இரண்டு பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் 68 வயதுடைய கண்ஹையா கலால் என்பவர் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக் கொண்டதால் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே சிறையில் இருந்ததை கணக்கிட்டு தற்போது தண்டனை அளிக்காமல் 800 ரூபாய் மட்டும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
