புனே மாவட்டம், ஜுன்னார் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தில், ஆகஸ்ட் 3ஆம் தேதி காலை 10 மணி அளவில் நடந்த பரபரப்பான சம்பவம் ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
அந்த பகுதியில் உள்ள லிப்ட் அருகே நின்றிருந்த பெண்ணிடம் முகமூடி அணிந்த ஒரு மர்ம நபர் சென்று, ஒரு கேள்வி கேட்பது போல் நடித்து, திடீரென அவரது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறித்துவிட்டு தப்பி ஓடியுள்ளார். இந்த சம்பவம் முழுவதும் அந்த கட்டிடத்தின் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
View this post on Instagram
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றவாளியை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையில், கடந்த மாதம் ஜூலையில் புனே மாவட்டம் நிக்டி பிராதிகரணில் உள்ள ஒரு பங்களாவில் மூவர்கூடிய மர்மநபர்கள் நுழைந்து, வயதான வியாபாரியின் கைகளை கட்டி வைத்து, விலைமதிப்புடைய பொருட்களை கொள்ளையடித்த சம்பவமும் போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான விசாரணையும் நடைபெற்று வருகிறது.
