வாட்ஸ் அப் பேஸ்புக் உள்ளிட்ட சோசியல் மீடியா தளங்களை விட இன்ஸ்டாகிராம் தான் அதிக அளவில் பிரபலமாகி வருகிறது. தற்போது இந்தியாவில் மட்டும் 43 கோடிக்கும் அதிகமானோர் இன்ஸ்டாகிராம் உபயோகப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ள அமெரிக்காவில் இந்தியாவை விட பாதிக்கு பாதி குறைவாக 17 கோடி பேர் மட்டுமே இன்ஸ்டாகிராமை பயன்படுத்துகின்றனர். இன்ஸ்டாகிராமில் தாய் நிறுவனமான மெட்டா அவ்வபோது புதிய அப்டேட்டுகளை பயனர்களுக்கு வழங்கி வருகிறது.
அந்த வகையில் தற்போது மெட்டா நிறுவனம் ஒரு முக்கிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இன்ஸ்டாகிராமில் உள்ள லைவ் வசதியை இனி அனைவரும் பயன்படுத்த முடியாத அளவுக்கு சில விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் ஆயிரம் பின் தொடர்பவர்களைக் கொண்ட பொது கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே லைவ் வீடியோக்களை வெளியிட முடியும். தற்போது வரை எந்த ஒரு பயனரும் லைவ் வசதியை பயன்படுத்தி வந்த நிலையில் இனிமேல் 1000 பின் தொடர்பவர்களை கொண்ட பொது கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே லைவ் வீடியோக்களை வெளியிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
