கர்நாடகாவில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் மூன்று மகன்கள் என மொத்தம் ஐந்து பேர் உள்ளனர். இதில் மூத்த மகனான பிரியங் கார்கே சித்தராமையா தலைமையில் கர்நாடகா அரசில் பஞ்சாயத்து ராஜ், கிராமப்புற வளர்ச்சி, தகவல் தொழில்நுட்பம் எலக்ட்ரானிக் ஆகிய துறைகளின் அமைச்சராக வேலை பார்த்து வருகிறார்.

இவரது இரண்டாவது மகன் மிலிந்த் கார்கே கடந்த சில நாட்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் இவர் தற்போது பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.