உத்திரபிரதேசம் மாநிலம் ஹரித்துவார் மாவட்டத்தில் மான்ஸா தேவி கோவில் அமைந்துள்ளது. சுமார் 500 அடி உயரம் கொண்ட இந்த கோவில் சிவாலிக் மலை மீது அமைந்துள்ளது. அங்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கத்தை விட ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக திரண்டு இருந்தனர். இந்த கோவில் ஹரித்வாரில் அமைந்துள்ள 5 புனித தளம் மற்றும் பஞ்ச தீர்த்தங்களில் ஒன்று.

இந்த நிலையில் கோவிலுக்கு செல்லும் படிக்கட்டுகள் தொடங்கும் இடத்தில் உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்ததாக வதந்தி ஒன்று பரவியது. இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கோவிலுக்கு சென்றவர்களில்  ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் நெரிசலில் சிக்கினர்.

இதனால் 35 பேருக்கும் மேல் படுகாயம் அடைந்தனர். மேலும் 6 பேர் உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கூட்டத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், கோவிலுக்கு செல்லும் படிக்கட்டுகள் தொடங்கும் இடத்தில் மின்சாரம் பாய்வதாக  பரவிய வதந்தியால்  பக்தர்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டு கூட்ட நெரிசல் ஏற்பட்டது என கூறினார்.

இந்த சம்பவம் குறித்து உத்தர பிரதேச மாநில முதல்வர் தன்னுடைய முகநூலில் வருத்தம் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, மான்ஸா தேவி கோவிலுக்கு செல்லும் வழியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் தீவிரமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் SDRF உள்ளூர் காவல்துறை மற்றும் மீட்பு துறையினர்  சம்பவ இடத்தில் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து பக்தர்களின் நலனுக்காக மாதா ராணியை  வேண்டிக்கொள்கிறேன் என கூறியுள்ளார். மேலும் மின் கசிவு ஏற்பட்டதாக வதந்தியே கிளப்பியவர் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வழக்கினை  நீதித்துறை விசாரணைக்கு உத்தரவிட்டதாக கூறியுள்ளார். இது குறித்து பிரதமர்  மோடி தன்னுடைய எக்ஸ் தள பதிவில் வருத்தம் தெரிவித்து இருந்தார்.

கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த  இறங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தோர் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் நிர்வாகம் உதவிகளை வழங்கி வருகிறது என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட பாதை மிகவும் குறுகிய பாதை. முக்கிய பண்டிகை காலங்களில் இந்த பாதை மூடப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால் நேற்று‌பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்த நிலையிலும் இந்த பாதை அனுமதிக்கப்பட்டது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.