பாண்டியராஜ் இயக்கத்தில் பிரபல நடிகரான விஜய் சேதுபதி தலைவன் தலைவி திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். தலைவன் தலைவி திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்தில் யோகி பாபு, தீபா, மைனா நந்தினி, காளி வெங்கட், ஆர் கே சுரேஷ், அருள் தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் ரிலீசான முதல் நாள் தலைவன் தலைவி திரைப்படம் 12 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து மக்கள் மத்தியில் அமோக் வரவேற்பை பெற்றது.
படம் ரிலீஸ் ஆகி மூன்று நாட்கள் கடந்த நிலையில் 25 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இனிவரும் நாட்களில் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
