சென்னை: நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சபரீசன் என்ற மாணவர், அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பில் பயின்று வந்தார். அவர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அழகப்பா கல்லூரி மாணவர்கள் விடுதியில் தங்கி இருந்த நிலையில், திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோட்டூர்புரம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவர் தற்கொலை செய்திருப்பது அவரது குடும்பத்தாரிடமும், கல்வி நிறுவனத்திலும் மிகுந்த சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
