தென்காசி மாவட்டம் சீவநல்லூர் கிராமத்தில் ஒரு கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சிறப்பு பூஜையை முன்னிட்டு நடைபெற்ற அன்னதானம் சாப்பிட ஊர் மக்கள் சென்றனர். அப்போது தென்னை மரத்தில் இருந்த கதண்டின் கூடு கலைந்ததால் அங்கிருந்தவர்களை கதண்டுகள் கடித்தது. இதனால் மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த மக்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு வயதான தம்பதியினரான லட்சுமணனும் அவரது மனைவி மகராசியும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மற்ற 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
