சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் ஒரு 18 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலைக்கு சென்று வந்த நிலையில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த மாணவி பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த நிலையில் instagram மூலமாக இவர்களுக்கு பழக்கம் ஏற்பட்டு பழகி வந்தனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில், அந்த வாலிபர் தன்னுடைய வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவியை வரவழைத்துள்ளார்.
பின்னர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி அந்த மாணவியுடன் நெருக்கமாக இருந்தார். இதில் அந்த மாணவி கர்ப்பமான நிலையில் தற்போது ஐந்து மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.
இது தொடர்பாக மாணவி குழந்தைகள் நல மையத்திற்கு தகவல் கொடுத்த நிலையில் அவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து கட்டிட தொழிலாளியை வலை வீசி தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
