சமூக ஊடகங்களில் ரீல்ஸ் வீடியோ எடுத்து லைக்ஸ் வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இளைய தலைமுறை மட்டும் இல்லாமல் வயதில் மூத்தவர்களும் ரீல்ஸ் எடுக்கின்றனர். அந்த வகையில் ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில் வயதில் மூத்த ஒரு நபர் டான்ஸ் ஆடுகிறார். அதனை அவரது மனைவி செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கிறார். இருவரையும் சற்று தூரத்தில் இருந்து வேறு ஒரு வாலிபர் வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
இதனை பார்த்த நெட்டிசன்கள் அந்த நபர் தன் வாழ்க்கையை உண்மையிலேயே அனுபவிக்கிறார் என கமெண்ட் செய்து வருகின்றனர். இதுவரை அந்த வீடியோ லட்சக்கணக்கான பார்வையாளர்களை கடந்துள்ளது. பலரும் வீடியோவை பார்த்து மகிழ்ச்சியாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
