அமெரிக்காவை சேர்ந்த புகழ் பெற்ற கோனி பிரான்சிஸ். சமீபத்தில் இவர் பாடிய pretty Little baby என்ற பாடல் மிகவும் வைரலானது. இவருக்கு 87 வயது ஆகும் நிலையில் நேற்று நிமோனியா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இவர் கடந்த 1950 முதல் 1960களில் மிகவும் பிரபலமான பாடகியாக விளங்கினார்.
நியூ ஜெர்சியில் பிறந்து வளர்ந்த இவர் நான்கு வயது முதலே பாடுவதில் மிகவும் திறமையாக இருந்தார். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவினால் அவதிப்பட்டு சிகிச்சையில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் தற்போது நிமோனியா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
