டெல்லியிலிருந்து கோவாவுக்குப் புறப்பட்டிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E-231) இன்று இரவு, ஒரு இயந்திரம் நடுவானில் செயலிழந்ததால் மும்பையின் சட்டரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

விமானம் புறப்பட்ட பிறகு இரவு 9:25 மணிக்கு விமானியின் தரப்பு விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்துக்கு (ATC) அவசரநிலை தகவலை தெரிவித்ததாக வட்டாரங்கள் கூறுகின்றன.

அதனைத் தொடர்ந்து, விமானம் இரவு 9:42 மணிக்கு பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. விமான நிலையத்தில் அவசரநிலை செயல்முறைகள் முழுமையாக செயல்படுத்தப்பட்டன. தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. தரையிறங்கியதும், விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

இண்டிகோ நிறுவனத்தின் பேச்சாளரும் ஒரு அறிவிப்பில், “6E-231 என்ற விமானம் தொழில்நுட்பக் கோளாறால் மும்பையில் முன்னுரிமை அடிப்படையில் தரையிறக்கப்பட்டது. விமானம் தற்போது பரிசோதிக்கப்படுகிறது. பயணிகள்  சென்றடைய மாற்றுத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு ஏற்பட்ட இடையூருக்கு  வருந்துகிறோம்” என்று தெரிவித்தார்.