உத்திரப்பிரதேசம், பண்டா மாவட்டத்தில் உண்மையென நம்ப முடியாத வகையில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அங்கு வசித்து வரும் 35 வயதான அஷோக் என்பவர்,  மதுபோதையில் இருந்தபோது, ஒரு உயிருள்ள பாம்பை பிடித்து அதை தனது வாயில் வைத்து மென்று விழுங்க தொடங்கியுள்ளார்.

இந்த சம்பவம் நடந்தபோது அஷோக் மதுபோதையில் தனது வீட்டின் வெளியில் இருந்துள்ளார். அந்த நேரத்தில் அவர் ஒரு பாம்பை பிடித்து, அதை நேராக வாயில் வைத்து மென்று, பல துண்டுகளாக கடித்து விழுங்கியுள்ளார். இதைப் பார்த்த அவரது தாய் சியா துலாரி பயத்தில் கத்தி, உடனே பாம்பை அவரது வாயிலிருந்து வெளியே எடுத்து விட்டதாகவும், ஆனால் அதற்குள் அவர் அந்த பாம்பின் இரண்டு துண்டுகளை விழுங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இச்சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனே அஷோக்கை அருகிலுள்ள சமுதாய சுகாதார மையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு வெளியான வீடியோவில், அஷோக்  மருத்துவமனையின் பெஞ்சில்  கவலையுடன் அமர்ந்திருக்கும் காட்சி பதிவாகியுள்ளது.

“>

 

மருத்துவர்கள் கூறுகையில், தற்போது அவரது உடல் நிலை எந்த பிரச்சனையும் இல்லை  எனத் தெரிவித்தனர். மேலும் அந்த பாம்பு விஷமில்லாதது என்பதே பெரிய நற்செய்தி என்றும், விஷமுடைய பாம்பு இருந்திருந்தால் இது பெரும் விபரீதம்  ஏற்பட்டிருக்கும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் தற்போதைய சமூகத்தில் மதுபோதையின் தாக்கம் எப்படி ஆபத்தான முடிவுகளை உருவாக்கக்கூடும் என்பதை எடுத்துக்காட்டுகிறது.