தமிழக முதல்வர் ஸ்டாலின் மயிலாடுதுறையில் புதிய திட்டங்களை தொடங்கி வைத்த பிறகு பேசினார். அவர் பேசியதாவது, விமர்சனம் என்ற பெயரில் நமக்காக விளம்பரம் செய்யும் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி. தேர்தலுக்கு முன்பாக டெபாசிட் போட்டு வாங்கிய மனுக்களை எல்லாம் எக்ஸஸ் சீட்டாக போட்டு வொர்க் ஷீட்டாக மாற்றினேன்.
திமுக அரசின் மகளிர் உரிமைத்தொகை உட்பட அனைத்து திட்டங்களும் அதிமுகவினரையும் சென்றடைகிறது. சுந்தரா டிராவல்ஸ் போல் ஒரு பேருந்து எடுத்துக் கொண்டு எடப்பாடி பழனிச்சாமி கிளம்பிவிட்டார். உங்கள் குடும்ப நலனுக்காக எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவிடம் அதிமுகவை அடகு வைத்தார். ரெய்டில் இருந்து குடும்பத்தை காக்கவே அமித்ஷா வீட்டு கதவை எடப்பாடி பழனிச்சாமி தட்டினாரே தவிர மக்களை காப்பதற்காக அல்ல.
சொந்த காட்சியைச் சேர்ந்தவர்களே எடப்பாடி பழனிச்சாமியை நம்பாத போது மக்கள் எப்படி நம்புவார்கள். மேலும் சுந்தரா டிராவல்ஸ் பேருந்தில் இருந்து புகை வருவது போல் இபிஎஸ் வாயிலிருந்து பொய்யாக வருகிறது என்றார்.
