இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது ஒரு முக்கிய அடையாள ஆவணமாகும். தற்போது அனைத்து அரசு மற்றும் அரசு சாரா வேலைகளுக்கும் ஆதார் என்பது ஒரு அத்தியாவசியமான ஆவணமாக மாறிவிட்டது. இதன் காரணமாக ஆதார் எடுத்து 10 வருடங்கள் ஆகிவிட்டால் அதனை புதுப்பிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில் இதற்கு அடுத்த வருடம் வரை கால அவகாசமும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் அட்டை எடுத்துவிட்டால் அவர்களுக்கு 7 வயது ஆகும்போது ஆதார் கார்டை புதுப்பிக்க வேண்டும். அதன்படி குழந்தைகளுக்கு 7 வயது ஆகும்போது கைரேகை மற்றும் கருவிழி பதிவு விவரங்களை பயோமெட்ரிக் முறையில் புதுப்பிக்க வேண்டும். இல்லையெனில் அவர்களுடைய ஆதார் அட்டை செயலிழந்து விடும் என ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பெற்றோர்களின் செல்போனுக்கு ஆதார் ஆணையம் குறுந்தகவல் அனுப்புவதாக கூறப்படுகிறது.
