ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஷார்ஜியாவில் கடந்த ஜூலை எட்டாம் தேதி விப்பாஞ்சிகா (32)என்ற பெண் தன்னுடைய ஒரு வயது பெண் குழந்தை வைபவியுடன் திடீரென மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பெண்ணின் சொந்த ஊர் கேரள மாநிலம். இதில் குழந்தையின் தலையணையால் அமுக்கப்பட்டு மூச்சு திணறி உயிரிழந்தது தெரியவந்துள்ளது. அதாவது தன் குழந்தையை கொலை செய்துவிட்டு அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இது தொடர்பாக அந்த பெண்ணின் கணவர் நிதீஷ், சகோதரி நிது பென், தந்தை மோகன் ஆகியோர் மீது பெண்ணின் குடும்பத்தினர் தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம் சாட்டியுள்ள நிலையில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் விபாஞ்சிகா மற்றும் நிதிஷ் இருவருக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் அதன் பிறகு சார்ஜியாவுக்கு குடி பெயர்ந்தனார்.

இதில் கணவன் கருப்பாக இருப்பதாலும் மனைவி கலராக இருப்பதாலும் சில பிரச்சனைகள் வந்துள்ளது. மேலும் இதுபோன்று பல பிரச்சனைகளால் தங்கள் மகளை அவர்கள் தற்கொலைக்கு தூண்டியதாகவும் தன் மனைவிக்கு அவர் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி இருந்ததாகவும் கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக அந்த பெண் தன் குழந்தையுடன் வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் குடும்பத்தின் நிலைமையை சமாளிக்க முடியாமல் தன் குழந்தையை கொலை செய்துவிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.