சென்னை ராயபுரம் மண்டலத்தில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானம் தொடர்பாக நடவடிக்கை எடுக்காததால் சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி அடைந்துள்ளது. இதையடுத்து சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபனுக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. அதாவது நீதிபதிகள் மாநகராட்சி ஆணையரின் சம்பளத்திலிருந்து 1 லட்சம் ரூபாயை கழித்து அதை அடையாறு புற்றுநோய் நிறுவனத்தின் கணக்கில் டெபாசிட் செய்யுமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் கோர்ட் அவமதிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட ரூ.1 லட்சம் அபராதத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்று முறையிடப்பட்டது. அப்போது ஐஏஎஸ் அதிகாரி என்றால் கோர்ட்டை விட மேலானவர் என்று தலைநிறைத்துக் கொள்கிறாரா? எங்கள் அதிகாரத்தை காட்டலாமா என்று காட்டமாக நீதிபதி கூறினார்.

மேலும் வழக்கறிஞர்கள் தவறான பிரமாண பத்திரிக்கை கொடுத்திருந்தாலும் அதை படித்து பார்த்து கையெழுத்துப் போட்டிருக்க வேண்டும். இல்லை என்றால் அவர் ஆணையராகவே இருக்க தகுதி இல்லை என்றும் தெரிவித்தார். இதை தொடர்ந்து சென்னை மாநகராட்சி ஆணையர் நாளை நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.