
இந்தியாவில் பெரும்பான்மை சமூகத்தை விட சிறுபான்மையினர் அதிக சலுகைகளையும் பாதுகாப்புகளையும் பெறுகின்றனர் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறினார். இதற்கு AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர் கூறியதாவது நீங்கள் இந்திய குடியரசின் அமைச்சர் மன்னர் கிடையாது. நீங்கள் இருப்பது அரசியல் அமைப்பு சட்டப் பதவி அறியாமை கிடையாது. சிறுபான்மை உரிமைகள் அடிப்படை உரிமைகள் தொண்டு கிடையாது.
இந்திய முஸ்லிம்கள் ஒவ்வொரு நாளும் பாகிஸ்தானியர், வங்கதேசியர், ஜிஹாதி அல்லது ரோஹிங்கியாக்கள் என்று அழைக்கப்படுவது நன்மையா? இந்திய குடிமக்கள் கடத்தப்பட்டு வங்கதேசத்திற்குள் தள்ளப்படுவது பாதுகாப்பா? நமது வீடுகள், மசூதிகள் மற்றும் மஜார்கள் சட்டவிரோதமாக புல்டோசர்களால் இடிக்கப்படுவதை பார்ப்பது ஒரு பாக்கியமா? சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் கண்ணுக்குத் தெரியாதவர்களாக மாற்றப்படுவதா?
இந்திய முஸ்லிம்களின் குழந்தைகள் மட்டுமே தங்கள் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டிகளை விட மோசமாக வாழ்க்கை சூழலில் உள்ளன மற்ற நாடுகளின் பிற சிறுபான்மையினருடன் ஒப்பிட நாங்கள் கேட்கவில்லை. பெரும்பான்மை சமூகம் பெறுவதை விட அதிகமாக நாட்களுக்கு ஏற்கவில்லை. சமூக பொருளாதார மற்றும் அரசியல் நீதி என்று அரசியலமைப்பு வாக்குறுதி அளிப்பதை நாங்கள் கேட்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.