
திமுக கட்சியின் மூத்த நிர்வாகி கோவிந்தசாமி. இவர் காவேரிப்பட்டினம் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ ஆவார். இவர் தற்போது உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பின் காரணமாக காலமான நிலையில் அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது பற்றி ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் கடந்த 1964 மற்றும் 1965 ஆகிய ஆண்டுகளில் ஹிந்தி திணிப்புக்கு எதிராக நடந்த மொழிப்போர் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைக்கு சென்றவர் கோவிந்தசாமி. இவர் பெரியார், அண்ணா, கலைஞர் கருணாநிதி மற்றும் பேராசிரியர் அன்பழகன் ஆகியோரோடு சேர்ந்து பணிபுரிந்தவர். மேலும் அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.