
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தலை முன்னிட்டு ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரத்தை தொடங்கி வைத்துள்ளார். அடுத்து வரும் தேர்தலில் திமுக அதே கூட்டணியுடன் களம் காணும் நிலையில் வீடு வீடாக சென்று முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரத்தை முதலில் தொடங்கி வைத்தார். இந்நிலையில் நேற்று புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தின் போது திடீரென திமுக நிர்வாகிகள் அமைச்சர் கேஎன் நேருவுடன் சண்டை போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது ஒரு நிர்வாகி ஓரணியில் தமிழ்நாடு என்று சொல்லிவிட்டு அமைச்சரின் போட்டோவையே போடல. இதுதான் உங்க ஓரணியா. இன்று ஆவேசத்துடன் அமைச்சர் கே.என் நேருவை நோக்கி கேள்வி எழுப்பினார். அதோடு ஓரிணியில் தமிழ்நாடு என்று கூறிவிட்டு அதில் திமுகவினரே இல்லை என ஒருவர் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதாவது நேற்று நடைபெற்ற கூட்டத்தின் போது ஓரணியில் தமிழ்நாடு என்ற பேனர் மேடையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அதில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் கே.என் நேரு, ரகுபதி ஆகியோரின் புகைப்படங்கள் இருந்தது. ஆனால் அதே பகுதியைச் சேர்ந்த அமைச்சர் மெய்யநாதனின் புகைப்படம் பேனரில் இல்லாததால் அவரின் ஆதரவாளர்கள் அமைச்சரின் போட்டோ எங்கே எனக் கூறி சண்டை போட்டனர்.
இதற்கு முன்னதாக திமுக நிர்வாகிகள் அமைச்சர் நேருவை வழிமறித்து சண்டை போட்ட நிலையில் அது குறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையும் தற்போது இந்த வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது திமுக வட்டாரத்தில் தற்போது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மில்டன் @Milton_Off என்ன அங்க சத்தம் 😂😂😂. pic.twitter.com/rUOGQ3clXU
— Sangeetha -TVK✨ (@sangeet29332013) July 8, 2025