
இந்திய திரை உலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்ட நடிகை சமந்தா. இவர் சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற தெலுங்கு சங்க நிகழ்ச்சி “தானா 2025” நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அங்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சமந்தா பேசியதாவது, இந்த இடத்திற்கு வந்து நின்று நன்றி சொல்வதற்கே எனக்கு 15 வருடங்கள் ஆகிவிட்டது. அமெரிக்காவில் உள்ள தெலுங்கு மக்கள் என் மீது காட்டும் அன்புக்கு என் மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் இருந்து இங்குள்ள அனைவரும் என்னை உங்கள் வீட்டில் உள்ள மகளைப் போலவே நடத்தினீர்கள். மேலும் நான் நடித்து வெளியான சுபம் திரைப்படம் அமெரிக்காவில் உள்ள பார்வையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பை பெற்றது.
நான் என் வாழ்க்கையில் எந்த முடிவை எடுத்தாலும் முதலில் என்னுடைய தெலுங்கு பார்வையாளர்கள் அதை விரும்புவார்களா? யோசித்து முடிவு செய்வேன்.
அதேபோல நான் நடித்த ஓ பேபி படம் அமெரிக்காவில் ஒரு மில்லியன் டாலர்களை வசூலித்தது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. நாம் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் என் இதயத்திற்கு மிக நெருக்கமானவர்கள் நீங்கள் என பேசிக்கொண்டு இருக்கும்போதே உணர்ச்சி வசப்பட்டு மேடையிலேயே நடிகை சமந்தா கண்ணீர் விட்டு அழுதார்.
இதனைக் கண்ட ரசிகர்கள் அதிர்ச்சியில் நின்றனர். உடனே நிகழ்ச்சி தொகுப்பாளர் சுமா ஓடிவந்து சமந்தாவின் கண்ணீரை துடைத்து ஆறுதல் கூறினார். இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.