
போண்டா தொகுதியில் 4 முறை எம்பி-யாகவும் வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வரதன் சிங்கின் தந்தையுமான குன்வர் ஆனந்த் சிங் (87) என்பவர் நேற்று உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
“UP Tiger” என்று அழைக்கப்படும் இவர் மன்காபூர் அரசு குடும்பத்தைச் சேர்ந்தவர். உத்திரபிரதேச அரசியலில் மிக முக்கியமான முகமாக அறியப்பட்ட குன்வர் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதோடு சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.