
தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக சுமார் 10 லட்சம் பக்தர்கள் வருகை புரிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிக பிரமாண்டமாக நடைபெறும் திருச்செந்தூர் கும்பாபிஷேக விழாவிற்காக தமிழகம் உட்பட வெளி மாநிலங்களில் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று கும்பாபிஷேகம் என்பதால் இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கி ஆட்சியர் அறிவித்துள்ளார். இதன் காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படாது. மேலும் இன்று திருச்செந்தூருக்கு தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் சுமார் 6000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.