உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் மனோஜ் குமார். இவர் நொய்டாவில் உள்ள ஜிம் ஒன்றில் பயிற்சியாளராக வேலை பார்த்து வருகிறார். அதே ஜிம்மில்  11-ம் வகுப்பு படிக்கும்  16 வயது சிறுமி ஒருவர் சேர்ந்துள்ளார்.

நேற்று வழக்கம் போல ஜிம்முக்கு சென்ற சிறுமி உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது மனோஜ் சிறுமியிடம் அத்துமீறி நடந்துள்ளார். இதனால் பயந்து போன சிறுமி வீட்டிற்கு சென்று தன் பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மனோஜை கைது செய்து அவரை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.