மகாராஷ்டிராவில் சமீப காலமாக ஹிந்தி மற்றும் மராத்தி மொழி பிரச்சனைகள் என்பது அதிகரித்து வரும் நிலையில் இதுகுறித்த செய்திகள் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை பயன்படுத்துகிறது. சமீபத்தில் மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக அரசு எதிர்க்கட்சிகளின் தொடர் எதிர்ப்பைத் தொடர்ந்து பள்ளிகளில் ஹிந்தி மொழி கட்டாயம் என்ற உத்தரவை திரும்ப பெற்றது.

இந்நிலையில் ஹிந்தி மொழி திணிப்புக்கு எதிராக உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே இருவரும் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ள நிலையில் ராஜ் தாக்கரே மராத்தி பேசாதவர்களை காதுக்கு கீழ் அடியுங்கள் அதனை வீடியோ எடுக்காதீர்கள் என்று கூறியிருந்தார். இந்நிலையில் ராஜ் தாக்கரே கண்டிப்பாக மராத்தி மொழி கற்க வேண்டும் என்று கூறிய நிலையில் அங்கு வசித்து வரும் ஒரு தொழிலதிபரான சுஷீல் கெடியா என்பவர் நான் 30 வருடங்களாக இங்கு வசிக்கிறேன். எனக்கு ஹிந்தி தான் தெரியும். மராத்தி தெரியாது. இனியும் நான் மராத்தி மொழி கற்றுக் கொள்ள மாட்டேன் என்று அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பதிவிட்டு இருந்தார்.

இதன் காரணமாக ராஜ் தாக்கரே கட்சித் தொண்டர்கள் அவருடைய அலுவலகத்தை சூறையாடினார். மேலும் இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தொழிலதிபர் சுஷீல் கெடியா தான் பேசியதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.