உத்தரபிரதேச மாநிலத்தின் சித்ரகூட் என்ற யாத்திரை நகரத்தில், ஒரு லங்கூர் குரங்கு காட்டிய காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. ஹரியானா எண் பதிவுடைய நான்கு சக்கர வாகனத்தின் கூரையில் அமர்ந்த குரங்கு, நகரின் முக்கியமான சாலைகளில் சுமார் இரண்டு கிலோமீட்டருக்கும் மேல் பயணம் செய்தது.

அந்த லங்கூர் யாரையும் தொந்தரவு செய்யாமல், அமைதியாக அமர்ந்து,  நகரத்தை சுற்றிவந்தது. பொதுமக்கள் மற்றும் யாத்ரீகர்கள் இந்த காட்சியை மொபைல்களில் வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டனர்.

ஹரியானாவிலிருந்து யாதிரை மேற்கொண்ட யாத்ரீகர்கள் சிலர், அந்த குரங்கு தங்களது காரின் கூரையில் அமர்ந்திருப்பதை கவனிக்கவில்லை. குரங்கு எதுவும் செய்யாமல் அமைதியாக இருப்பதை பார்த்த பிறகு அவர்கள் பயணம் தொடர்ந்தனர். இது மத நகரமான சித்ரகூட்டில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இந்த வீடியோவை பார்த்த பலர், “இது சும்மா ஒரு குரங்கு இல்லை… சாக்ஷாத் ஹனுமான் சுவாமி தானே” என ஆன்மிக நம்பிக்கையோடு கருத்துகள் தெரிவித்தனர். சிலர் “இது சித்ரகூட்டின் அரச ஊர்வலம் போலவே தெரிகிறது” என்றும் பதிவிட்டுள்ளனர்.

இந்த வீடியோ குறித்து சித்ரகூட்டின் மக்கள் மற்றும் பக்தர்கள் பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளனர். இது போன்ற நிகழ்வுகள், யாத்திரை நகரங்களில் ஆன்மிக உணர்வுடன் இணைந்து மக்கள் மனதில் பரபரப்பையும் பக்தியையும் ஏற்படுத்துகின்றன. தற்போது இந்த வீடியோ சித்ரகூட்டில் பேசப்படும் முக்கிய நிகழ்வாகவே மாறி இருக்கிறது.