அமெரிக்காவில் பறக்கும் விமானத்தில் வைத்து சக பயணி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அது குறித்த வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது கடந்த 30ஆம் தேதி பிலடெல்பியாவில் இருந்து மியாமிக்கு ஒரு விமானம் புறப்பட்டது.

இந்த விமானத்தில் இஷான் சர்மா என்ற 21 வயதான இந்திய வம்சாவளியை சேர்ந்த வாலிபர் பயணம் செய்தார். இவர் திடீரென தனக்கு முன்னாள் அமர்ந்து இருந்த கீனு எவென்ஸ் என்பவரை தாக்கிய நிலையில் இருவரும் கழுத்தைப் பிடித்து நெரித்து ஒருவருக்கொருவர் சரமாரியாக அடித்துக் கொண்டனர்.

அதாவது இஷான் ஷர்மா அந்த பயணியை மிரட்டிய நிலையில் அவர் அவசரநிலை பொத்தானை அழுத்தியதும் ஆத்திரத்தில் கழுத்தைப் பிடித்து நெரித்துள்ளார். அவருடைய நடத்தை மிகவும் விசித்திரமானது என பாதிக்கப்பட்ட பயணி போலீசில் புகார் கொடுத்துள்ள நிலையில் விமானம் தரையிறங்கியதும் இஷான் ஷர்மாவை போலீசார் கைது செய்தனர். மேலும் இதோ அந்த வீடியோ,