
உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டம் நஜிபாபாத்தில் சாவித்ரி என்கிளேவ் பகுதியில் ஓய்வுபெற்ற பொதுப்பணித் துறை (PWD) பொறியாளர் ஒருவர் தெருநாய் குரைத்ததாகக் கூறி, தனது ரிவால்வர் மூலம் 5 முறை துப்பாக்கிச்சூடு நடத்திய அதிர்ச்சிக் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
बिजनौर के नजीबाबाद मे PWD विभाग के रिटायर इंजीनियर ने कुत्ते को मारी ताबड़तोड़ गोलियां कुत्ते की हुई मौत,मोहल्ले मे फैली दहशत, इलाके के लोगो ने किया जमकर हंगामा @dmbijnor @bijnorexpress2 @Uppolice @Comm_Moradabad pic.twitter.com/9WzJTbhaLw
— Rahul Rajput (@RahulRajput5426) July 4, 2025
சம்பவத்தின் முழுக் காட்சியும் அங்கு இருந்த சிசிடிவியில் பதிவாகியிருந்தது. அதில், தெருநாயை நோக்கி தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தும் காட்சிகள் தெளிவாக பதிவாகியுள்ளன. இந்த துப்பாக்கிச்சூட்டின் விளைவாக அந்த நாய் அருகிலுள்ள ஒரு வடிகாலில் இறந்து கிடக்கும் வீடியோவும் வெளியாகியுள்ளது.
बिजनौर में पीडब्ल्यूडी के सेवानिवृत इंजीनियर ने कुत्ते को मारी गोली।
5 राउंड गोली चलायीं, मोहल्ले में फैली दहशत
लोगों मेंआक्रोश इंजीनियर के रिवाल्वर का लाइसेंस निरस्त करने की मांग
बिजनौर के नजीबाबाद कोतवाली मार्ग सावित्री एंक्लेव कॉलोनी का मामला pic.twitter.com/mHYWKUpYOh
— Newstrack (@newstrackmedia) July 4, 2025
புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டுள்ளன. இந்த செயலை கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள், குற்றம் சாட்டப்பட்ட ஓய்வுபெற்ற பொறியாளரின் ஆயுத உரிமத்தை ரத்து செய்து, அவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் மாவட்ட காவல் நிலையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து மாநில காவல்துறையினர் பெரும் கவனம் செலுத்தி, பிஜ்னோர் காவல்துறையினருக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது போன்ற மனிதாபிமானமற்ற செயல்கள் மீதான சமூகத்தின் கண்டனம் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது.