ஓசூர் அருகே நிகழ்ந்த 13 வயது சிறுவன் கொலை சம்பவம் தற்போது அதிர்ச்சிகரமான முறையில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக ஏற்கனவே மாநெட்டி பகுதியைச் சேர்ந்த மகாதேவன் மற்றும் அவரது நண்பர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

சமீபத்தில் நடைபெற்ற போலீஸ் விசாரணையின் மூலம், மகாதேவனின் காதலியாக உள்ள ரதி (வயது 20) என்ற கல்லூரி மாணவியும் இந்த கொலைக்குத் தொடர்புடையவர் என தெரியவந்ததைத் தொடர்ந்து, அவளையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

விசாரணையில், மகாதேவன் மற்றும் ரதி தனிமையில் இருந்ததை அந்த சிறுவன் பார்த்திருக்கிறான் என்பதற்காகவே, அவர்களது செயல்கள் வெளியே தெரியக்கூடாது என்ற பயத்தில் சிறுவனை கடத்தி, பின்னர் கொலை செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம், ஓசூர் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சி மற்றும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த கொலை தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்தக் குழுவில் மேலும் யார் யார் இருந்தனர், திட்டமிட்ட கொலைதான் என்றே ஏதேனும் தகவல்கள் உள்ளனவா என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சிறுவன் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இழப்பை தாங்க முடியாமல் தவிக்கின்றனர் மேலும் , குற்றவாளிகள் கடும் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.