ஹாலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக இருந்தவர் மைக்கேல் மேட்சன்(67). இவர் “Kill Bill”, ‘Reservoir Dogs’ உள்ளிட்ட ஏராளமான க்ரைம் தில்லர் படங்களில் நடித்துள்ளார். இப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் மூலம் அவர் இந்திய ரசிகர்களின் கவனத்தை பெற்றார். இந்நிலையில் நேற்று திடீரென இவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சமீப காலமாக சினிமா பிரபலங்கள் பலரும் மாரடைப்பால் உயிரிழப்பது அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.