செங்கல்பட்டு மாவட்டம் மேம்பாக்கம் அருகே சுமார் ₹80 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் தற்போதைய நிலையை நேரில் ஆய்வு செய்த தமிழக மாநில நகராட்சித் துறை அமைச்சர் சேகர் பாபு, இது குறித்து செய்தியாளர்களிடம் முக்கிய தகவல்களை தெரிவித்தார். அவர் கூறியதாவது, “இந்த ஆண்டுக்குள் புதிய பேருந்து நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் வகையில் பணிகள் முடிக்கப்பட உள்ளன” எனத் தெரிவித்தார்.

இந்த சந்தர்ப்பத்தில், திருப்புவணம் காவல் நிலையத்தில் இளைஞர் ஒருவர் மரணம் அடைந்த சம்பவம் குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியதைக் குறித்து அவர் பதிலளித்தார். “திமுக அரசின் கையில் இரத்தக்கரை படிந்துவிட்டது” என அன்புமணி கூறியதை கடுமையாக கண்டித்த அமைச்சர் சேகர் பாபு, “தாயையும் தந்தையையும் மறந்து பாசத்தை மறந்தவர் கரையைப் பற்றிக் பேசுவதற்கும் உரிமையில்லை” என்றார்.

அவர் மேலும் கூறியதாவது, “தமிழ்நாட்டிற்கே மாறாத ஒரு கரையை அன்புமணி ஏற்படுத்தியிருப்பதாக நினைத்துக் கொள்ளலாம். ஆனால், குடும்ப பாசம், தாய் தந்தையின் பாசம் என்பவற்றை விட்டுவிட்டு, அரசியலுக்காக வார்த்தைகள் வீசுவது ஏற்புடையதல்ல.”

திருப்புவணம் சம்பவம் குறித்து, “நிச்சயமாக வருந்தத்தக்கது, பொருத்தமளிக்கக்கூடியதல்ல. ஆனால், அந்த சம்பவத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் போர்கால அடிப்படையில் பல நடவடிக்கைகள் எடுத்திருக்கிறார்.” எனத் தெரிவித்தார். “சம்பந்தப்பட்ட போலீசாரை கைது செய்திருக்கின்றார், குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கியிருக்கின்றார், சிபிஐ விசாரணைக்கும் முன்வந்திருக்கின்றார்” என அவர் விளக்கினார்.

அதனைத் தொடர்ந்தார்: “நீதிமன்றம் சொல்வதற்கும் முன்னரே நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது தான் நமது மான்மிகு முதல்வரின் நடத்தை. இது தான் சட்டத்தின் ஆட்சி. ”

இதன் மூலம், அன்புமணியின் விமர்சனங்களுக்கு அரசியல் ரீதியான கடும் பதிலடி வழங்கியுள்ளார் அமைச்சர் சேகர் பாபு.