
நீலகிரி மாவட்டம் மலை ரயில் பாதையில் ரீல்ஸ் எடுப்பதற்காக வாலிபர் ஒருவர் ரயில் தண்டவாளத்தில் பைக் ஓட்டிச் சென்றதுடன் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். நாகர்கோவிலில் இருந்து சமீபத்தில் சென்னை சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் இளம்பெண் ஒருவர் ஆபத்தான முறையில் படியில் நின்ற சgவாறு வீடியோ எடுத்து பதிவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பின்னர் அவர் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டார். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர் ஊட்டி மலை ரயில் பாதையில் அத்துமீறி ரயில் தண்டவாளத்தில் பைக்கை ஓட்டிச் சென்றதுடன், தண்டவாளத்தின் குறுக்கே பைக்கை நிறுத்தி புகைப்படம் மற்றும் ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
தற்போது இந்த வீடியோ வெளியாகிய பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் அத்துமீறலில் ஈடுபட்ட வாலிபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.