கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே கொளஞ்சியப்பன் (62)  என்பவர் வசித்து வந்துள்ளார். அவரது முதல் மனைவி வீரலட்சுமி இறந்துவிட்டதால் இரண்டாவது ஆக பத்மாவதி (47) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதில் கொளஞ்சியப்பன் என்எல்சி இந்தியா நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக ஓய்வு பெற்றார்.

அதன் பிறகு ஒரு துணிக்கடையில் காவலாளியாக அவர் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்த நிலையில் இந்த விவகாரம் பத்மாவதிக்கு தெரிய வந்ததால் அவர் கள்ளக்காதலை கைவிடுமாறு தன் கணவரை பலமுறை கண்டித்துள்ளார்.

இருப்பினும் அதனை கணவன் காதில் வாங்கிக் கொள்ளாத நிலையில் சமீபத்தில் இருவருக்கும் இடையே இது தொடர்பாக தகராறு முற்றியதால் கோபத்தில் கொளஞ்சியப்பன் தன் கள்ளக்காதலிக்கு வீட்டை எழுதிக் கொடுத்து விடுவேன் என்று கூறினார். இது பத்மாவதிக்கு கோபத்தை ஏற்படுத்திய நிலையில் சம்பவநாளில் இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்து தூங்கிக் கொண்டிருந்த தன் கணவனை கடப்பாறையை எடுத்து தலையில் குத்தி கொடூரமாக பத்மாவதி கொலை செய்தார்.

இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் இது பற்றி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.