கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் வாலிபர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் இந்த வசித்து வருகிறார். இவர் அருகில் உள்ள கல்லூரியில் பி.காம் முடித்த நிலையில் தற்போது வேலை தேடி அலைந்து வருகிறார். இந்நிலையில் முகநூல் மூலம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இவருக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பினார்.

அதன் மூலம் வாலிபர் அந்த நபருடன் பழகிய நிலையில் அந்த மர்மநபர் அவர் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். அதற்காக பணம் செலவாகும் என்ற நிலையில் வாலிபர் முகநூல் மூலம் அறிமுகமான நபரின் வங்கி கணக்கிற்கு ரூ. 9 லட்சத்து 23 ஆயிரத்து 600 அனுப்பியுள்ளார். சில நாட்களுக்குப் பின் அந்த மர்ம நபர் வாலிபரிடம் தொடர்பை துண்டித்த நிலையில், சந்தேகமடைந்த வாலிபர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தார்.

உடனடியாக கிருஷ்ணகிரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் முகநூல் மூலம் பழகி அடையாளம் தெரியாத நபரிடம் வாலிபர் ரூ. 9 லட்சத்து 23 ஆயிரத்து 600 ஐ பறி கொடுத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.