புஜேரா பகுதியில் வித்தியாசமான சாலை வடிவமைப்பை ஐக்கிய அரபு அமீரகம் கொண்டு வந்துள்ளது. அதாவது சாலையில் உள்ள வெள்ளை கோடுகளில் வாகனங்கள் செல்லும்போது இசை எழுப்பும் வகையில் அந்த சாலை அமைந்துள்ளது. இந்த புதுமையான முயற்சியை பற்றி புஜேரா நுண்கலை அகாடமியின் பொது இயக்குனர் அலி ஒபைத் அல் ஹபிதி விரிவாக கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, ”புஜேரா பகுதி அமீரகத்தின் முக்கியமான பகுதியாகும். இந்த பகுதிக்கு பல பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக தற்போது இப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது. தற்போது புது முயற்சியாக 750 மீட்டர் தூரம் வரை இசை எழுப்பும் சாலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த சாலை ஷேக் ஹலிபா சாலையில் இருந்து புஜேரா நீதிமன்றம் வரை அமைக்கப்பட்டுள்ளது. சாலைகளில் உள்ள வெள்ளை கோடுகளில் வாகனங்கள் செல்லும்போது அந்தக் கோடுகளில் இருந்து இசை வரும். இந்த இசையை பீத்தோவன் என்ற இசை கலைஞர் இயற்றியுள்ளார். இவர் கடந்த 1770 ஆம் ஆண்டு ஜெர்மனியின் பான் பகுதியில் பிறந்தவர் ஆவார்.

சாலைகளில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இசையை கடந்த 1804 ஆம் ஆண்டு முதல் 1808 ஆம் ஆண்டில் வரை இயற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இவருக்கு 40 வயது இருக்கும் போது கேட்கும் திறனை இழந்து விட்டதால் இந்த இசையை அவர் கேட்க முடியவில்லை. ஆனாலும் அவர் கேட்க முடியாத இசையை சாதனை பெற வைத்துள்ளார். இந்த இசையாயானது இசைக்கலைஞர் பித்தோவனின் 9 வது சிம்போனி என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அவர் இயற்றிய “மாஸ்டர் பில்” என அறியப்படும் பல முக்கிய சிம்பொனிகள் மிகவும் புகழ்பெற்றவை என்று கூறப்படுகிறது. இந்த வசதியால் சுற்றுலா பயணிகளின் அதிக எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இசை என்பது ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் முக்கியமான ஒன்றாக கருதப்படும் நிலையில், அதனை சாலைகளில் வடிவமைத்து வாகன ஓட்டிகளை மகிழ்விக்கும் இந்த புது முயற்சி அனைவராலும் வித்தியாசமாக பார்க்கப்படுகிறது.