
அமெரிக்காவில் மின்சார வாகன ஊக்குத்தொகையை குறைக்கும் மசோதாவுக்கு எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து அதிபர் ட்ரம்புக்கும், மஸ்க்குக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து அமெரிக்க அரசின் செலவினத்தை குறைக்க மஸ்க் தலைமையில் அமைக்கப்பட்ட DOGE என்ற அமைப்பில் இருந்து மஸ்க் வெளியேறினார்.
தற்போது வரை அதிபர் ட்ரம்ப் கொண்டு வந்துள்ள வரி மற்றும் செலவு மசோதாவுக்கு எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். மேலும் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டதை அடுத்து புதிய கட்சியை தொடங்குவதாக மஸ்க் கருத்துக்கணிப்புகளும் நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து மஸ்க் மீண்டும் தென்னாப்பிரிக்காவுக்கே அனுப்பப்படுவார் என ட்ரம்ப் எச்சரித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து அதிபர் ட்ரம்ப் கூறியதாவது, ” மஸ்கை நாடு கடத்த முடியுமா? என எனக்கு தெரியாது. ஆனால் அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய சொல்லலாம்.
அவரது நிறுவனங்கள் குறித்து DOGE அமைப்பை விசாரிக்க சொல்லலாம் ஏனெனில் அவர் அதிக சலுகைகளை அனுபவித்து வருகிறார்”என தெரிவித்துள்ளார். இது அமெரிக்கா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.